Friday, July 1, 2022

முதல் வலைப்பதிவு (எழுதிதான் பார்ப்போமே!)

             இப்பூவுலகில் தோன்றி ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கும் மேல் கடந்தாகிவிட்டது. ஒரு இனிய மாலை வேளையில், கடந்தகால நிகழ்வுகளை அசைபோட்டபோது, இதுநாள்வரை நாம் என்னதான் சாதித்தோம் என்ற எண்ணம் தோன்றியது (உண்மையை சொல்லவேண்டுமென்றால் சத்தியமா ஒண்ணுமில்ல!). சிறுவயதில் பள்ளி பாடப்புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தபோதிலும் (என்ன செய்வது! மதிப்பெண் வாங்கியாக வேண்டுமல்லவா!), பாடப்புத்தகங்களுக்கும் அப்பால் சில புத்தகங்களை வாசித்த நினைவுகள் மெல்ல அலையாடுகிறது. ஆம்! தாத்தா பள்ளி தலைமையாசிரியர். அவரின் விருப்பத்திற்கிணங்க திருப்பாவை, திருவெண்பாவை, திருக்குறள் போன்ற நூல்களை வாசித்தது (அவருக்கு வாசித்துகாட்டியது!) நினைவிலிருக்கிறது. அவரின் வழிகாட்டுதலின்றி எங்கள் ஊரின் மளிகைக்கடையில் சிறுவர்மலர், தங்கமலர் இன்னும் பல புத்தகங்கள் (செய்தித்தாள்களுடன் இணைத்து வருவன) போன்றவைகளையும் வாங்கி வந்து படித்து, உடன் கடையினில் திருப்பிக்கொடுத்ததும் (மளிகைப்பொருள் பொட்டலம் போட வேண்டும் அல்லவா!) மனதிற்கு இதமான நினைவினை தருகிறது.

பொதுவாக, ஒரே விதமான செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் நமது வாழ்க்கையில் நடைபெறும்போது, அதன்மீதான ஆர்வம் குறைந்து மனதிற்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். இப்போது எனது மனநிலையும் அதுவே. சரி என்ன செய்யலாம் என யோசனை செய்தபோது, பலநாட்களாக கிடப்பில் போடப்பட்ட (சோம்பேறித்தனத்தால்) யோசனையான “எழுதுவது” என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவே இந்த முதல் பதிவு....     

“எழுதிதான் பார்ப்போமே”!

முதல் வலைப்பதிவு (எழுதிதான் பார்ப்போமே!)

                 இப்பூவுலகில் தோன்றி ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கும் மேல் கடந்தாகிவிட்டது. ஒரு இனிய மாலை வேளையில், கடந்தகால நிகழ்வுகளை அசைபோ...